தேவாலயத்தில் ரூ.10 லட்சம் திருட்டு; போலீசார் விசாரணை!

சென்னையில் தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாயை மர்ம நபர் ஒருவர் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, அடையாறு, சர்தார் பட்டேல் சாலையில் ஹவுஸ் ஆப் பிரேயர் என்கிற தேவாலயம் உள்ளது. அந்த ஆலயத்தில் தொழில் அதிபர்கள், அரசு அதிகாரிகள், நீதிபதிகள் என முக்கிய நபர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஒன்றாம் தேதி ஆலய நிர்வாகத்தினர் ஆராதனை முடிந்த பிறகு காணிக்கை பணம் மொத்தம் ஒன்பது லட்சத்து 95 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை எண்ணி அலுவலகத்தில் உள்ள பீரோவில் வைத்துள்ளனர். மறு நாள்  நிர்வாகத்தினர் பிரோவில் உள்ள பணத்தை எடுக்க வந்த போது பணம் அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடந்தனர். 

இது தொடர்பாக ஆலய பொருளாளர் பென்சன் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஆலயத்தில் உள்ள சி.சி.டி. வி காட்சியை ஆய்வு செய்த போது முகம் மற்றும் கைகளில் பாலிதின் கவர்களை கட்டி கொண்டு வந்த மர்ம நபர் பிரோவில் இருந்த பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. 

அந்த மர்மநபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து தேடி வருகின்றனர். பிரோவில் பணம் இருப்பது தெரிந்த நபரே இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடதேதி வருகின்றனர். அதன் அடிப்படையில் ஆலய நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: சத்தீஸ்கா், தெலங்கானா செல்லும் பிரதமா்...ரூ.23 ஆயிரம் கோடியில் கட்டப்பட்ட ஆலை அா்ப்பணிப்பு!