50 சவரன் நகை கொள்ளை: பக்கத்து விட்டாரின் உதவியுடன் நடந்த திருட்டு?

சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை மற்றும் 1.5 லட்சம் ரூபாய் ரொக்கம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகரைச் சேர்ந்தவர் இக்பால். குடும்பத்தினருடன் வசித்து வரும் இவர் நேற்று காலை தனது உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு இன்று காலை திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இக்பால், உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 50 சவரன் நகை மற்றும் சுமார் 1.5 லட்சம் ரூபாய் ரொக்கம், வீட்டில் வைத்திருந்த விலையுயர்ந்த டி.வி உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து திருட்டுச் சம்பவம் தொடர்பாக இக்பால் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்தடுத்து வீடுகள் நிறைந்த பகுதி என்பதால் அப்பகுதி வாசிகளின் உதவியுடன் தான் திருட்டுச் சம்பவம் அரங்கேறியிருக்க கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.