தீவிரவாதிகளைத் தேடி என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை.. ஈரோட்டில் பரபரப்பு!!

ஈரோடு மாவட்டத்தில் இரவு என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் அதிரடி சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீவிரவாதிகளைத் தேடி என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை.. ஈரோட்டில் பரபரப்பு!!
Published on
Updated on
1 min read

ஈரோடு.. தீவிரவாதிகள்:

ஈரோட்டில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சென்னையில் இருந்து 3 பேர் கொண்ட குழுவினர் ஈரோடு விரைந்தனர்.

வீட்டின் அருகே சோதனை:

பின்னர் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தங்களது விசாரணையை தொடங்கினர். இதைத் தொடர்ந்து ஈரோடு காவல்துறையினருடன் சேர்ந்து, என்.ஐ.ஏ. அதிகாரிகள், மாணிக்கம் பாளையம் மெயின் ரோட்டில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்பட்ட வீட்டின் அருகே சோதனை நடத்தினர்.

தீவிர விசாரணையில் என்.ஐ.ஏ அதிகாரிகள்:

இதனால் வீட்டைச் சுற்றி ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டனர். பின்னர் வீட்டிற்குள் நுழைந்த அதிகாரிகள், அங்கே வசித்துவந்த 5 பேரிடமும் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மேலும், வீட்டில் இருந்த ஸ்மார்ட்போன், லேப்டாப், பாஸ்புக் உள்ளிட்ட ஆவணங்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

காவல்துறையினர் எச்சரிக்கை:

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடக்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வர உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் காவல்துறையினர் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com