75 பவுன் தங்கம், 40 கிலோ வெள்ளி திருட்டு! மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு!!!

திருக்கோவிலூரில் பிரபல நகைக்கடை ஒன்றில் 75 பவுன் நகை மற்றும் 40 கிலோ வெள்ளி பொருட்கள் திருடிய மர்ம ஆசாமிகளை 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

75 பவுன் தங்கம், 40 கிலோ வெள்ளி திருட்டு! மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு!!!

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் வடக்குவீதியில்  நிதேஷ் என்பவருக்கு சொந்தமான பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நகைக் கடைக்கு சுற்றுப்புற கிராமத்தில் இருந்து அதிகளவில்  வாடிக்கையாளர்கள்  வந்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்றிரவு வியாபாரம் முடிந்து 10  மணிளவில் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றனர். இன்று காலை 9 மணியளவில் பணியாளர்கள் வழக்கம்போல் கடையைத் திறந்தனர்.

அப்போது, கடையில் இருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன், டிஎஸ்பி பழனி, ஆய்வாளர் பாபு, உதவி ஆய்வாளர் சிவசந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். அப்போது, 75 பவுன் தங்க நகை மற்றும் 40 கிலோ வெள்ளி பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது. திருடுபோன தங்க நகை மற்றும் வெள்ளி பொருள்களின் மொத்த மதிப்பு சுமார் 50 லட்சம் ஆகும்.

மேலும் படிக்க | #Exclusive || வீடியோவால் சிக்கிய அதிமுக..! மின்கட்டண உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் மின் திருட்டு..!

பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியாக, நகைக் கடையின் பின்பக்கமாககொள்ளை கும்பல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் மதில் சுவரின் மேல் எகிரி  குதித்துஅங்கிருக்கும் பள்ளி கட்டிடத்தின் மேல் ஏறி கயிற்றை பயன்படுத்தி, நகைக் கடைக்கு மேல் மாடிக்குச் சென்றுள்ளனர்.

 அதன்பின், நகைக் கடை உள்ளே வருவதற்கு மேலே அமைக்கப்பட்டு இருந்த இரும்பு கதவை கேஸ் வெல்டிங் மூலம் வெட்டி எடுத்து, அதன் வழியாக நான்கு பேர் கொண்ட கும்பல் கடையின் உள்ளே நுழைந்து, 75 கிலோ பவுன் மற்றும் 40 கிலோ வெள்ளி பொருட்களை அள்ளிச் சென்றுள்ளனர். இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட கைரேகை உதவி ஆய்வாளர் ஜெய்சங்கர் தலைமையிலான அதிகாரிகள்  ராஜவேல், அசோகன், செல்வராஜ் உள்ளிட்டோர் கைரேகையை பதிவு செய்தனர்.

மேலும் படிக்க | 4 பேர், 22 செல்போன்கள்! திருடர்களைப் பிடித்த காவலர்கள்!

மேலும், மோப்ப நாய் ராக்கி  வரவழைக்கப்பட்டு, செல்வகுமார் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். இந்த மோப்ப நாய் பள்ளியின் அருகில் அங்கும், இங்கும் ஓடி சென்று, பள்ளிக்குப் பின்புறம் பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் நின்றது. அங்கு இருக்கும் சிசிடிவி காட்சி மற்றும் பல்வேறு கடைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஏற்கனவே கடையில் உள்ள சிசிடிவி கேமராவின் ஒயர் துண்டிக்கப்பட்டதால், கடையில் உள்ள சிசிடிவி காட்சிகள் பதிவாகவில்லை என்பதால், குற்றவாளிகளை பிடிப்பதில் போலீசார் குழம்பி போய் உள்ளனர். 10 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் லாக்கரில் வைத்து பூட்டப்பட்டிருந்ததால், கொள்ளை கும்பலுக்கு லாக்கர் இருக்குமிடம் தெரியாமல் போனதால், 10 கோடி மதிப்புள்ள நகைகள் தப்பியுள்ளது.

மேலும் படிக்க | சிலை கடத்தல்...சைபர் குற்றங்கள் குறித்து சைலேந்திர பாபு விளக்கம்!

கொள்ளை கும்பல் பயன்படுத்திய வெல்டிங் உபகரணங்கள் மற்றும் கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட பொருள்கள் சென்னையில் வாங்கப்பட்டதாக, முதல் கட்ட தகவல் கசிந்துள்ளது. மேலும், அவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்களா அல்லது வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களா என்ற கோணங்களில் மூன்று தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருக்கோவிலூர் வடக்கு வீதியில் பிரபல நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், இப்பகுதியில் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள் மத்தியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | காவல் நிலையம் பின்புறம் உள்ள மூன்று வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை..!