100க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ் தயார் செய்த கும்பல் கைது...

போலியாக கல்வி சான்றிதழ் தயார் செய்து நூற்றுக்கணக்கான பேருக்கு விற்பனை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்செய்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
100க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ் தயார் செய்த கும்பல் கைது...
Published on
Updated on
1 min read

தெலுங்கானா ஹைதராபாத்தில் உள்ள எல். பி நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் ஆனந்த், ஹேமந்த், ஷேக்சாஹின் ஆகியோர் பல்கலைக்கழகங்கள் பெயரில்  போலியாக கல்வி சான்றிதழ்களை தயார் செய்து விற்பனை செய்து வந்துள்ளனர்.

இது தொடர்பாக தகவல் கிடைக்கப்பெற்ற எல். பி. நகர் போலீசார் மூன்று பேரையும் பிடித்து அவர்களிடமிருந்து ஆந்திரா பல்கலைக்கழகம், காகத்திய பல்கலைக்கழகம், கீதம் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்கள் உட்பட பல்வேறு பல்கலைக்கழகங்கள் பெயரில் தயார் செய்யப்பட்ட போலி கல்வி சான்றிதழ்கள் மற்றும் பிளஸ் 2 சான்றிதழ்கள் ஆகியவற்றை கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

மூன்று பேரையும் கைது செய்த போலீசார் நடத்தி விசாரணையின் போது படித்துவிட்டு வேலை இல்லாமல் இருப்பவர்கள், தனியார் நிறுவனங்களில் வேலை தேடுபவர்கள், வெளிநாடுகளில் வேலைக்கு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் ஆகி யோரை அடையாளம் கண்டு தலா ஐம்பதாயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை போலி கல்வி சான்றிதழ்களை விற்பனை செய்ததாக தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் இருந்தும் கல்வி சான்றிதழ்களை வாங்கியவர்கள் அவற்றை உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.அல்லது அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com