
சென்னை ஒடைக்குப்பம் பகுதியில் 179-வது வார்டு பகுதியில் அதிமுக சார்பாக ஜமுனா கணேசன் போட்டியிட்டார். திமுக சார்பில் கயல்விழி என்பவர் போட்டியிட்டார். நேற்று மாலை வாக்கு பதிவு நடந்து கொண்டிருந்த போது, திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த கதிர் என்ற திமுக பிரமுகர் கத்தியோடு அடியாட்களுடன் வந்து வாக்கு பதிவு மையத்தில் புகுந்து, வாக்குப்பதிவு எந்திரத்தை சேதப்படுத்தி வாக்காளர்களை வெளியேற கூறி தகராறில் ஈடுபட்டார்.
இந்த விவகாரத்தில் திமுக பிரமுகர் கதிர் என்ற கதிரவன் மற்றும் அவருடன் வந்த நபர்கள் மீது அரசாங்க சொத்தை சேதப்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்து அமைதியை சீர்குலைத்தல் உள்ளிட்ட 3 மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள கதிரவன் மற்றும் அவருடன் வந்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.