தூத்துக்குடி : கத்தியை காட்டி பணம் பறித்த மர்ம நபர்கள் தப்பி ஓட்டம் ...போலீசார் விசாரணை

தூத்துக்குடி : கத்தியை காட்டி பணம் பறித்த மர்ம நபர்கள் தப்பி ஓட்டம் ...போலீசார் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே டாஸ்மாக் ஊழியர்களிடம் கத்தியை காட்டி 1,50470 ரூபாய் பணம் பறிக்கப்பட்டுள்ளது.இது குறித்து எட்டயபுர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி : எட்டயபுரம் அருகே உள்ள முத்தலாபுரத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் நேற்றிரவு கத்தியை காட்டி மிரட்டி ரூ.1,50470 பணத்தை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக டாஸ்மாக் கடையில் போலீசார் விசாரணை நடத்திய போது அந்தக் கடையில் மது விற்பனை தற்போது வரை நடைபெறாததால் மது வாங்க வந்த மது பிரியர்கள் சோகத்தில் அமர்ந்துள்ளனர்.

மேலும் தெரிந்து கொள்ள ///  ஊராட்சி மன்றத் தலைவரை வெட்டிக் கொன்ற மர்மகும்பல்...

இந்தக் கடையில் பூசனூர் கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை மகன் ஐயப்ப சாமி ( 42 ) சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார் .விற்பனையாளராக தூத்துக்குடி அருகே உள்ள காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி (44) பணியாற்றி வருகிறார்.இருவரும் நேற்று இரவு டாஸ்மாக்கில் விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இரண்டு நபர்கள் மது வாங்க வருவது போல் வந்து கடையை பூட்டும் நேரத்தில் கத்தியை காட்டி விற்பனை செய்த ரூபாய் 1,50470 பறிமுதல் செய்து ஐயப்ப சாமி மற்றும் கருப்பசாமியிடம் இருந்த செல்போனையும் பறிமுதல் செய்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து ஐயப்ப சாமி எட்டயபுரம் போலீசில் புகார் செய்துள்ள நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தெரிந்து கொள்ள /// புதுச்சேரி : பிரபல ரவுடி மீது கொலை வெறி தாக்குதல்...கொலைக்கு உடந்தையான திருநங்கை...