தலைநகரில் தலைதூக்கும் போதை மாத்திரை விற்பனை- மூவர் கைது!

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைநகரில் தலைதூக்கும் போதை மாத்திரை விற்பனை- மூவர் கைது!

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பழைய வண்ணாரப்பேட்டையில் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த சன்னு (எ) அப்துல் அமித்,  டி.பி.கே தெருவைச் சேர்ந்த அல்லா பகேஸ், கொருக்குப்பேட்டை ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த அருண் மற்றும் பாபு ஆகியோர் போதை மாத்திரை விற்பனை செய்வதை கண்டறிந்த போலீசார் 3 பேரை கைது செய்த நிலையில் பாபு தப்பி தலைமறைவானார்.

தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட 1 கிலோ 600 கிராம் கன்னாபிஸ் மற்றும் 1 கிலோ 110 கிராம் போதை மாத்திரைகள் மற்றும் ஒரு ஆட்டோவை வண்ணாரப்பேட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.  3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள பாபுவை போலீசார் தேடி வருகின்றனர்.