உன்ன போட வந்துட்டு இருக்கேன்.. கெத்தாக பேசிய ரவுடி சடலமாக மீட்பு.. தஞ்சையில் பரபரப்பு!!

போட வரேன்டானு கெத்து காட்டிட்டு போன ரவுடியை ஸ்கெட்ச் போட்டு தூக்கி பழி தீர்த்து கொண்ட ரவுடிகள் மூன்று பேர் பாபநாசம் நீதி மன்றத்தில் சரண் அடைந்தனர்.

உன்ன போட வந்துட்டு இருக்கேன்.. கெத்தாக பேசிய ரவுடி சடலமாக மீட்பு.. தஞ்சையில் பரபரப்பு!!

தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவன் மீது பல்வேறு கொலை வழக்குகள்உள்ளன. குறிப்பாக 2018 ம் ஆண்டு எலும்பு தினேஷ் என்ற ரவுடியின் தம்பி தமிழ்செல்வனை கடத்தி சென்று புது ஆற்றில் அமுக்கி கொலை செய்துள்ளார்.

இதனால் எலும்பு தினேஷ் மற்றும் அவனது கூட்டாளிகள் இளனி மணிகண்டன், கிரன் ஆகியோர் மனோகரனை பழி தீர்க்க காத்து இருந்தனர். இவர்கள் மீதும் பல்வேறு கொலை வழக்குகள் உள்ளன. ஒரு வழக்கு தொடர்பாக இரு தரப்பினரும் கடந்த வாரம் நீதி மன்றம் வந்தபோது ஒருவருக்கு ஒருவர் சவால் விட்டு கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 21ம் தேதி இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அன்று இரவு மனோகரன் இளனி மணிகண்டனுக்கு போன் செய்து உன்ன போட வந்துட்டு இருக்கேன் என கெத்தாக பேசியுள்ளார்.  

மனோகரனை எதிர்பார்த்து காத்து இருந்த இளனி மணிகண்டன், கிரன், விஜய் ஆகியோர் ஸ்கெட்ச் போட்டு மனோகரனை தூக்கி கடத்தி சென்று கொலை செய்து பழி தீர்த்து கொண்டு தமிழ்செல்வன் கொல்லப்பட்ட புது ஆற்றில் தூக்கி வீசி விட்டு சென்று விட்டனர்.

இந்நிலையில் கல்லணை கால்வாய் கரையில் பலத்த காயங்களுடன் மனோகரன் உடல் கரை ஒதுங்கி கிடப்பதாக காவல்துறையினருக்கு தவகல் தொிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினா் உடலை கைப்பற்றி அரசு மருத்துவ மனைக்கு பிரோத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் கொலைக்குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் மனோகரனைக் கொலை செய்ததாக இளனி மணிகண்டன், உள்ளிட்ட மூன்று போ் பாபநாசம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்களை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.