வடமாநிலத்தில் இருந்து ரயிலில் கடத்தல்... 4 டன்னுக்கும் அதிகமான குட்கா, ஹான்ஸ் பறிமுதல்... 

சென்னையில் ரயிலில் கடத்திவரப்பட்ட 4 டன்னுக்கும் அதிகமான குட்கா, ஹன்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் வணிகவரித் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வடமாநிலத்தில் இருந்து ரயிலில் கடத்தல்... 4 டன்னுக்கும் அதிகமான குட்கா, ஹான்ஸ் பறிமுதல்... 

சென்னை ராயபுரம் ரயில் நிலையத்தில் நேற்று வட மாநிலத்தின் பலவேறு பகுதிகளில் இருந்து  பொருட்களை ஏற்றி வந்த கூட்ஸ் ரயிலில் உரிய ஆவணம் இல்லாமல் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக மின்சார பொருட்கள் செல்போன் கடத்தப்படுவதாக வணிகவரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வணிக வரித்துறை அதிகாரிகள் சென்னை ராயபுரம் ரயில் நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். 

அப்பொழுது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹன்ஸ், பாக்கு உள்ளிட்ட பொருட்கள் 4 டன்னுக்கும் அதிகமான அளவில் ரயிலில் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அதுமட்டுமின்றி உரிய ஆவணங்கள் இன்றி பல லட்சம் மதிப்புடைய மின்சார பொருட்கள் மற்றும் செல்போன்கள் உணவு பொருட்கள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

தொடர்ந்து வணிக வரித்துறை அதிகாரிகள் ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட பொருட்கள் மற்றும் போதை பொருட்களையும் பறிமுதல் செய்து கொண்டு செல்ல முற்பட்டனர். ஆனால் அப்பொழுது வடமாநிலத்தை சேர்ந்த  ரயில்வே ஊழியர்கள் அதற்கு ஒத்துழைப்பு தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ஒரு கட்டத்திற்கு மேல் சென்னை வண்ணாரப்பேட்டை மற்றும் பூக்கடை ஆகிய காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பறிமுதல் செய்த அனைத்து பொருட்களையும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களையும் வாகனங்களில் ஏற்றி கிரீம்ஸ் ரோடு சாலையில் அமைந்துள்ள வணிகவரி துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். 

மேலும் வணிகவரித் துறை அதிகாரிகள் தரப்பில் பறிமுதல் செய்யப்பட்ட மின்சாதன பொருட்கள் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்க பட்டாள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும் என்று வணிகவரித் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முதல் கட்ட விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் அனைத்தும் பீகார் ஜார்க்கண்ட் ஒரிசா போன்ற மாநிலங்களில் இருந்து குறைந்த விலையில் வாங்கி தமிழகத்திற்கு கொண்டு வந்து பல்வேறு பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட குட்கா, ஹன்ஸ், பாக்கு உள்ளிட்ட போதைப் பொருட்களை கொண்டு வந்த நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் ரயிலில் கடத்திவரப்பட்ட 4 டன்னுக்கும் அதிகமான குட்கா, ஹன்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் வணிகவரித் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி தமிழகத்திற்கு கொண்டு வந்து அதிக விலையில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது விசாரணையில் அம்பலம்.

சென்னை ராயபுரம் ரயில் நிலையத்தில் நேற்று வட மாநிலத்தின் பலவேறு பகுதிகளில் இருந்து  பொருட்களை ஏற்றி வந்த கூட்ஸ் ரயிலில் உரிய ஆவணம் இல்லாமல் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக மின்சார பொருட்கள் செல்போன் கடத்தப்படுவதாக வணிகவரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் வணிக வரித்துறை அதிகாரிகள் சென்னை ராயபுரம் ரயில் நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹன்ஸ், பாக்கு உள்ளிட்ட பொருட்கள் 4 டன்னுக்கும் அதிகமான அளவில் ரயிலில் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அதுமட்டுமின்றி உரிய ஆவணங்கள் இன்றி பல லட்சம் மதிப்புடைய மின்சார பொருட்கள் மற்றும் செல்போன்கள் உணவு பொருட்கள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. 

தொடர்ந்து வணிக வரித்துறை அதிகாரிகள் ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட பொருட்கள் மற்றும் போதை பொருட்களையும் பறிமுதல் செய்து கொண்டு செல்ல முற்பட்டனர். ஆனால் அப்பொழுது வடமாநிலத்தை சேர்ந்த  ரயில்வே ஊழியர்கள் அதற்கு ஒத்துழைப்பு தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் சென்னை வண்ணாரப்பேட்டை மற்றும் பூக்கடை ஆகிய காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பறிமுதல் செய்த அனைத்து பொருட்களையும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களையும் வாகனங்களில் ஏற்றி கிரீம்ஸ் ரோடு சாலையில் அமைந்துள்ள வணிகவரி துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். 