சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்...

கேளம்பாக்கம் தனியார் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீதான வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.  

சிவசங்கர் பாபா மீதான  பாலியல் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்...

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார் எழுந்தது. இது தொடர்பாக, பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது போக்சோ  சட்டத்தின் கீழ் கேளம்பாக்கம் காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மூன்று, தனித்தனி புகார்களின் அடிப்படையில் சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா, உத்ரகாண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில், தகவல் தெரிவிக்கப்பட்டு, மருத்துவ சான்றிதழ் மற்றும் புகைப்பட ஆதாரங்கள் சமர்ப் பிக்கப்பட்டுள்ளது.

 இது தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஆதாரங்களை திரட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே  சிவசங்கர் பாபா மீதான வழக்கு விசாரணை சி. பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.