பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட திருநங்கைகள்...

பல்லடத்தில், பணம் கேட்டு நள்ளிரவில் வியாபாரியை வீடு புகுந்து தாக்கிய திருநங்கைகளின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட திருநங்கைகள்...

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் இசக்கி பாண்டி.பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகரில் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். என்ஜிஆர் சாலையில் தள்ளுவண்டி கடை நடத்தி வரும் இசக்கி பாண்டியன் நேற்று வியாபாரம் முடித்து விட்டு நள்ளிரவு 12 மணி அளவில் தள்ளு வண்டியோடு வீடு திரும்பும் போது திருநங்கை ஒருவர் அவரிடம் பணம் கேட்டு  தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இசக்கி பாண்டியன் பணம் இல்லை என கூறிவிட்டு தனது வீட்டிற்கு சென்று விட்டார்.இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் இரவு 12 மணி அளவில் இசக்கிபாண்டியன் வீட்டின் மீது கற்களை வீசியுள்ளனர்.சத்தம் கேட்டு வெளியே வந்த பாண்டியன்  குடும்பத்தினரையும் தாக்கியுள்ளனர்.

மேலும் படிக்க | விபத்தால் ஏற்பட்ட தகராறு... 1 மணி நேரமாக பாதிக்கப்பட்ட போக்குவரத்து...

மேலும் பாண்டியனை  கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். திருநங்கைகள் முத்து மீது தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. வாய் மற்றும் மூக்கு பகுதியில் பலத்த காயமடைந்த முத்து சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் இரு தரப்பினர் இடையே விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் திருநங்கைகள் பாண்டியனை சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | நீதிமன்ற வளாகத்தில் மனைவி மீது கணவர் ஆசிட் வீச்சு !!! பின்னணி என்ன?