4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி... 64 வயது நபருக்கு 6 ஆண்டுகள் சிறை...

புதுக்கோட்டை அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற 64 வயது முதியவருக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி... 64 வயது நபருக்கு 6 ஆண்டுகள் சிறை...

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற 64 வயது நபருக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை 30000 ரூபாய் அபராதம் அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற பரபரப்பான தீர்ப்பை இன்று வழங்கினார் மகிலா நீதிமன்ற நீதிபதி டாக்டர் R.சத்யா.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாலன் நகரில் கடந்த 1.82019 அன்று 64 வயது நபரான ராமச்சந்திரன் என்பவர் 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாகவும், இது சம்பந்தமாக திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் 2.8.2019 அன்று புகார் வழங்கியதன் பெயரில் ஆய்வாளர்கள் கவிதா வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தார். இந்நிலையில் 64 வயது நபர் குற்றம் செய்தது உறுதி செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

மேலும் இது சம்பந்தமாக புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது இந்த தீர்ப்பை வழங்கிய மகிலா நீதிமன்ற நீதிபதி டாக்டர் R.சத்யா 64 வயது ராமச்சந்திரன் குற்றவாளி என்றும் 4 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் நடந்து கொண்ட நபருக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் முப்பதாயிரம் ரூபாய் அபராதமும் அபராதம் கட்டத்தவறினால் ஆறு மாதம் கூடுதலாக சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என பரபரப்பான தீர்ப்பை வழங்கினார்.

மேலும் இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட அரசு வழக்கறிஞர் மற்றும் காவல்துறையினருக்கு பாராட்டுகளை தெரிவித்தார் மகிளா நீதிமன்ற நீதிபதி டாக்டர் R.சத்யா இதையடுத்து அறுபத்தி நான்கு வயது ராமச்சந்திரன் திருச்சியில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.