சிறுவன் உயிரிழப்பில் திருப்பம்... அவமானப்பட்ட இளைஞர் வெறிச்செயல்!!

சிறுவன் உயிரிழப்பில் திருப்பம்... அவமானப்பட்ட இளைஞர் வெறிச்செயல்!!
Published on
Updated on
1 min read

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே சிறுவன் விபத்தில் உயிாிழந்தாக கருதப்பட்ட நிலையில், உறவினா் ஒருவா் காரை ஏற்றி கொலை செய்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பூவாசல் பகுதியை சேர்ந்த ஆதிசேகர் என்பவா் சைக்கிளில் சென்றபோது காா் மோதி உயிாிழந்தாா். இந்நிலையில் அவரது பெற்றோா் ஆதிசேகா் சாவில் மா்ம இருப்பதாக காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்போில் போலீசா் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனா். அதில் அவரது உறவினா்  பிாியரஞ்சன் என்பவா் சிறுவனை காரை ஏற்றி கொலை செய்யும் காட்சிகள் பதிவாகியிருந்தது. 

இது குறித்து போலீசாா் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. முன்பாக, பிாியரஞ்சன் கோவில் பொது சுவரில் சிறுநீர் கழித்த பொழுது, சிறுவன் ஆதிசேகர், அவரை தட்டி கேட்டுள்ளார். இதனால், அவர்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அவமானமாக நினைத்த பிரியரஞ்சன், சிறுவன் மீது காரை ஏற்றி கொலை செய்துள்ளார்.

இந்நிலையில், போலீசார் கொலையாளி பிரியரஞ்சனை தீவிரமான தேடி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com