மூதாட்டியை அரிவாளால் வெட்டிவிட்டு 4 சவரன் நகைகளை கொள்ளையடித்த இருவர் கைது    

மன்னார்குடியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி தலையில் அறிவாளால் வெட்டி 4 பவுன் செயின் பறிப்பு 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.

மூதாட்டியை அரிவாளால் வெட்டிவிட்டு 4 சவரன் நகைகளை கொள்ளையடித்த இருவர் கைது      

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மன்னார்குடி கீழ முதல் தெருவில் வசித்துவருபவர் சர்வானந்தம் மனைவி மாரியம்மாள் (62), கடந்த 22ம் தேதி மர்ம நபர் மாரியம்மாளின் தலையில் அரிவாளால் வெட்டி விட்டு அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை பறித்து சென்றார்.  இதுகுறித்து மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். டி.எஸ்.பி. பாலச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர் . விசாரணையில் மாரியம்மாள் வீட்டு பக்கத்து வீட்டில் வசித்து வந்த உலகநாதன் மனைவி ராணி, அங்கன்வாடி பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் உலகநாதன் 2 வருடங்களுக்கு முன்பு இறந்தவிட்ட நிலையில் இரண்டு குழந்தைகள் மற்றும் தாயாருடன் வசித்து வருகிறார்.   ராணியின் ஆண் நண்பர் மன்னார்குடியை சேர்ந்த கார்த்தி (25),  ராணியின் கடன் பிரச்சனை காரணமாக கார்த்தியுடன் சேர்ந்து தனியாக வசித்து வந்த மாரியம்மாளின் தங்க நகை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளனர்.

கடந்த 22ம் தேதி தனியாக வீட்டில் தனியாக இருந்த மாரியம்மாளின் பின்புறமாக வந்து அரிவாளால் வெட்டி கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க செயினை பறித்து சென்றுள்ளார். இதற்கு ராணி உறுதுணையாக இருந்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் சிசிடிவி காட்சிகள் கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கார்த்தி தனது நண்பர் விக்னேஷிடம் அரிவாளால் வெட்டி செயினை பறித்து சென்ற சம்பவத்தை மதுபோதையில் கூறியுள்ளார்.  விக்னேஷ் போலீசாரிடம் இதுகுறித்து தெரிவித்ததை தொடர்ந்து, போலீசார் கார்த்தி மற்றும் ராணியினை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இருவரும் பணத்திற்காக நகையினை மாரியம்மாள் தலையில் வெட்டி நகை பறித்த குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜார் செய்தனர். அதனை தொடர்ந்து நீதிபதியின் உத்தரவின் பேரில் இருவரையும் 15 நாள் காவல் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து போலீசார் ராணி மற்றும் கார்த்தி இருவரையும் சிறையில் அடைத்தனர்.