ரயிலை கவிழ்க்க முயன்ற இருவர் கைது: சேலம் ரயில் நிலையத்தில் பரபரப்பு!

சேலத்தில் ரயிலை கவிழ்க்க முயன்ற இருவர்களை, தனிப்படை போலீசார்  கைது செய்தனர்.

ரயிலை கவிழ்க்க முயன்ற இருவர் கைது:  சேலம் ரயில் நிலையத்தில் பரபரப்பு!

சேலத்தில் ரயிலை கவிழ்க்க முயன்ற இருவர்களை, தனிப்படை போலீசார்  கைது செய்தனர்.

சேலத்தில் இருந்து பாளையம் நோக்கி சென்றுக்கொண்டிருந்த சரக்கு ரயிலை கவிழ்க்க மர்மநபர்கள் தண்டவாளத்தில் இரும்பு பிளேட் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதை பார்த்து சுதாரித்து கொண்ட ரயில் ஓட்டுநர் கோபிநாத், ஜங்ஷன் ரயில் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்தனர். தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி சம்பவம் நடந்த 5 மணி நேரத்தில் ரயிலை கவிழ்க்க முயன்ற செல்வகணபதி மற்றும் சேர்ந்த கோவிந்தராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களை சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.