
சேலத்தில் 80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்த வயதான மூதாட்டி ஒருவர், விவசாய நிலத்தில் களை பறித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த வாலிபர்கள் இருவரும், மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து புகார் அளித்தன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மூதாட்டியிடம் தகாத செயலில் ஈடுபட்ட விக்னேஷ் மற்றும் சீனிவாசன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.