முன்விரோதம்...பயங்கர ஆயுதங்களை கொண்டு கொலை செய்ய திட்டம் தீட்டிய 2 பேர் கைது...தப்பியோடியவரை தேடி வரும் போலீஸ்

புதுச்சேரியில் முன்விரோதம் காரணமாக நாட்டு வெடிகுண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டிய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்                               

முன்விரோதம்...பயங்கர ஆயுதங்களை கொண்டு கொலை செய்ய திட்டம் தீட்டிய 2 பேர் கைது...தப்பியோடியவரை தேடி வரும் போலீஸ்

புதுச்சேரி அடுத்த அரியாங்குப்பம் பழைய பாலம் அருகே நேற்று நள்ளிரவு போலிசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிருந்த மூன்று வாலிபர்களை விசாரணை செய்ய போலீசார் அழைத்துள்ளனர். அதனை கண்ட ஒரு வாலிபர் அங்கிருந்து தப்பி ஒடியதாக கூறப்படுகிறது.

இதனை கண்ட போலீசார் மீதம் உள்ள இருவரை சுற்றி வளைத்து பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில்  அவர்கள் அரியாங்குப்பம் புதுக்குளம் பகுதியை சேர்ந்த அஜித் மற்றும் நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்த ரிஷி என்பதும் இவர்கள் அஜித் விட்டருகே உள்ள   குணா என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்ய திட்டம் திட்டி இருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து அவர்களை கைது செய்த போலீசார், கொலை செய்வதற்காக வைத்திருந்த  2 அரிவாள், 3 நாட்டு வெடி குண்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல்  செய்து , இருவர் மீதும் வழக்கு பதிந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய சண்முகம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.