செம்மறி ஆட்டை மீட்க சென்ற இருவர் மீன் வலையில் சிக்கி உயிரிழப்பு...!!

செம்மறி ஆட்டை மீட்க சென்ற இருவர் மீன் வலையில் சிக்கி உயிரிழப்பு...!!

திருவண்ணாமலை அடுத்த கருந்துவம்பாடி கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் திருவேங்கடம் என்பவருக்கு சொந்தமான செம்மறியாடு தண்ணீர் குடிக்க சென்ற போது நீரில் மூழ்கியதால் ஆட்டை காப்பாற்ற சென்ற திருவேங்கடம் மீன் வலையில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளார்.  அப்போது அவரைக் காப்பாற்ற சென்ற ரமேஷ் என்பவரும் மீன் வலையில் சிக்கி ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  செம்மறி ஆட்டை காப்பாற்ற சென்ற இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துவம்பாடி கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் குமார் சங்கர் சகோதரர்களால் ஏரியில் போடப்பட்ட மீன் வலையில் திருவேங்கடம் என்பவருக்கு சொந்தமான ஆடு தண்ணீர் குடிக்க சென்ற போது சிக்கி தவித்ததாக கூறப்படுகிறது.  அப்போது ஆட்டின் உரிமையாளர் திருவேங்கடம் காப்பாற்ற சென்றபோது அவரும் மீன் வலையில் சிக்கி தத்தளித்துள்ளார்.  அவரைக் காப்பாற்ற சென்ற ரமேஷ் என்பவரும் மீன் வலையில் சிக்கி நீரில் மூழ்கி பரிதாபமாக உயர்ந்துள்ளனர்.

செம்மறி ஆடு இறந்து மிதப்பதை அப்பகுதியில் இருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்த போது திருவேங்கடம் ரமேஷ் இருவரின் உடல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிராமிய காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏரியில் மீன் பிடிப்பதற்காக போடப்பட்டிருந்த வலையில் செம்மறி ஆடு மற்றும் செம்மறி ஆட்டின் உரிமையாளர் அவரை காப்பாற்ற சென்றவர் என இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:   நட்சத்திர விடுதியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை... !!