செங்கல்பட்டில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டு.. நள்ளிரவில் இளைஞர்கள் அட்டகாசம்!!

செங்கல்பட்டில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டு.. நள்ளிரவில் இளைஞர்கள் அட்டகாசம்!!

செங்கல்பட்டு நகர் பகுதிக்கு உட்பட்ட களத்துமேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் வீரமனி இவரது மகன் சிவசஞ்சீவி(26) இவரது கே.டி.எம் இருசக்கர வாகனத்தை எப்போதும் போல் அவரது வீடு வாசலில் நிறுத்து விட்டு சென்றுள்ளார்.

இரு சக்கர வாகனம் திருட்டு

இந்நிலையில், நள்ளிரவில் அப்பகுதிக்கு அடையாளம் தெரியாத வகையில் முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் நுழைந்த மூன்று இளைஞர்கள், அருகாமையில் நிறுத்து வைக்கப்பட்டிருந்த கே.டி.எம் வாகனத்தின் சைட் லாக்-ஐ உடைத்து வாகனத்தை திருடிச்சென்றுள்ளனர்.

சிசிடிவி காட்சிகள்

இந்த திருட்டு சம்பவம் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் சிவசஞ்சீவி செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர் திருட்டு

குறிப்பாக சில தினங்களாகவே செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளிலும் இரயில்நிலையம் மற்றும் பேருந்துநிலையம் மற்றும் குடியிருப்பு பகுதிகள் என நோட்டமிட்டு தொடர்ந்து உயர்ரக இருசக்கர வாகனங்களை குறிவைத்து இளைஞர்கள் திருடி செல்வது வழக்கமாகிவிட்டது.