”என்கவுண்டர் திட்டம் குறித்து புகார் அளித்த விஷ்வா” நகல் கிடைத்ததாக தகவல்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட விஷ்வா தன்னை போலி என்கவுண்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாக புகார் அளித்த நகல் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

கடந்த ஆண்டு கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வந்த பிரபல ரவுடி, விஷ்வா ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் கையெழுத்திடாமல் தலைமறைவாக இருந்ததால் அவரை கைது செய்து அழைத்து வந்த போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பித்த போது துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதையும் படிக்க : விஸ்வாவை என்கவுண்ட்டாில் போட்டு விடவா? உதவி ஆய்வாளா் வீடியோ வைரல்!

இந்நிலையில், கையெழுத்திட வந்த விஷ்வாவிடம் கையெழுத்து  வாங்காத உதவி ஆய்வாளர் என்கவுண்டர் செய்வது குறித்து பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, தன்னை போலி என்கவுண்டரில் கொல்ல  திட்டமிட்டுள்ளதாக உள்துறை செயலாளர், காஞ்சிபுரம் எஸ்.பி. ஆகியோருக்கு விஷ்வா  அனுப்பிய புகார் மனு நகல் கிடைக்கப்பெற்றுள்ளது.