
சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் கோபிசெட்டிப்பாளையம் பகுதியில் ஒத்தகுதிரை தண்ணீர்பந்தல், புதூர், நல்லகவுடன்பாளையன், கள்ளிப்பட்டி பிரிவு, மொடச்சூர், ராஜன்நகர் ஆகிய பகுதிகளில் செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டிருந்தன.
கடந்த 2017 ஆம் ஆண்டு வரை அவை செயல்பட்டு வந்த நிலையில், பின்னர் இயங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவற்றை அந்நிறுவனத்தின் திட்ட பொறியாளர் ஆய்வு செய்தபோது ஐந்து இடங்களிலும் வைக்கப்பட்டிருந்த செல்போன் டவர்கள் மாயமாகி இருந்தன.
இதைத்தொடர்ந்து செல்போன் டவர்களைக் கண்டுபிடித்து தருமாறு கோபிசெட்டிபாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவரிடம் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்து கோபி காவல்துறையினர் செல்போன் டவர்களை தேடி வருகின்றனர்.