சினிமா படத்தை பார்த்து விட்டு திருட்டில் ஈடுபட்ட திருடர்கள்? யாரு படம்னு தெரியுமா?.. சென்னையில் அரங்கேறிய பகீர் சம்பவம்!!

சென்னை தாம்பரத்தில் பரபரப்பாக ஒரு திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதுவும் அரைகுறை ஆடையுடன் வந்த திருடர்களால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சினிமா படத்தை பார்த்து விட்டு திருட்டில் ஈடுபட்ட திருடர்கள்? யாரு படம்னு தெரியுமா?.. சென்னையில் அரங்கேறிய பகீர் சம்பவம்!!

சினிமா பார்த்து முன்னேறும் திருடர்கள்

திருட்டு சம்பவம் என்பது காலம் காலமாக நடந்து வருவது தான் என்றாலும் தான் சிக்கிவிடுவோம் என்று தெரிந்து கொண்டே திருடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது..

அதிலும் தற்போது, சினிமா பார்த்து திருடர்கள் முன்னேறி வருகின்றனர்.. என்னது முன்னேறி வாரங்களா? என்று நினைக்காதீர்கள்.. சினிமா பட பாணியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று சொல்ல வருகிறேன்..

அரைகுறை ஆடையுடன் திருடர்கள்

அந்த வகையில், தாம்பரத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. தாம்பரம் பகுதியில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அரைகுறை ஆடையுடன் திருடர்கள் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ள நிலையில், அதில் ஒரு சிறப்பான நகைச்சுவை சம்பவமும் நடந்துள்ளது.

அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சதீஷ்குமார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர் கடந்த சனிக்கிழமை தனது குடும்பத்துடன், ஆவடியில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார்.

மாமியார் வீட்டுக்கு சென்ற சதீஷ்குமார்

மாமியார் வீட்டுக்கு சென்ற நேரமோ என்னமோ.. சதீஷ்குமார் எதிர்வீட்டு காரர் பரபரப்புடன் போன் மூலம் அவரை தொடர்பு கொண்டு உங்க வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.

இதனை கேட்ட அதிர்ச்சி அடைந்த சதீஷ்குமார்.. (எண்ணெங்க சொல்றிங்க வீட்டை நல்லா தான பூட்டிட்டு வந்தேன்.. பின்ன எப்படி.. பக்கத்துக்கு வீடு காரர் - அடேய் வீட்டு கதவு திறந்திருக்கல.. உடைக்கப்பட்டிருக்கு) கற்பனை) அடிச்சி புடிச்சி தாம்பரத்தில் இருக்கும் தனது வீட்டுக்கு வந்துள்ளார் சதீஷ்குமார். (வீட்டின் உரிமையாளர் சதீஷ்குமார் - என்னத்த தூக்குனான்லோ தெரியிலையே)

13 சவரன் நகைகள் கொள்ளை

வீட்டுக்கு வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 13 சவரன் நகைகள் காணாமல் போய்யுள்ளதை கண்டு (2டைம்) அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சினிமா பட பாணியில் அடுத்தவர்களின் ஏடிஎம் கார்டுகளில் இருந்து பணம் கொள்ளை..https://malaimurasu.com/posts/crime/Stealing-money-from-other-peoples-ATM-cards-in-the-style-of-a-movi

100 சவரன் தங்க நகைகள் தப்பித்தது

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தாம்பரம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தலைக்கு வந்தது தலைப்பாகை ஓட போய்டிச்சி என்ற கதை வெளியே வந்துள்ளது. அதன்படி, சூட்கேசில் தனியாக வைத்திருந்த 100 சவரன் தங்க நகைகள் பத்திரமாக இருப்பது தெரியவந்துள்ளது. நல்ல வேலை 13நோட போச்சி என நிம்மதி பெருமூச்சு விட்டார் சதீஷ். இருப்பினும் 13 சவரன் தங்க நகை என்பது சும்மாவா.. விரைந்து திருடர்களை பிடித்து நகைகளை மீட்டு தரும்படி, காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

வடிவேலு பட பாணியில் திருட்டு சம்பவம்

சிறப்பான சிரிப்பான சம்பவம் இங்க தான் இருக்கு.. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், அடுக்குமாடி குடியிருப்பில் திருட வந்த திருடர்கள்.. வடிவேலு பாணியில் ஒரு சம்பவம் செஞ்சுட்டு தான் திருட தொடங்கி இருக்கிறார்கள்.

நகரம் மறுபக்கம் என்ற படத்தில் வடிவேலு திருட சென்ற வீட்டை தவிர அணைத்து வீட்டையும் பூட்டி விட்டு தான் திருட தொடங்கினார்.. ஆனால்ம் அதில் அவர் போலீசிடம் சிக்கிவிடுவார். சரி அதை விடுங்கள் நம்ம கதைக்கு வருவோம்.

அதே போல், இந்த அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்த திருடர்கள், திருட வந்த வீட்டை தவிர அக்கம் பக்கம் வீட்டை தாளிட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். (தாளிட்டு என்ன புண்ணியம், பூட்டு போடா வேண்டாமா?).. உள்ளிருப்பவர்கள் அந்த தாழ்ப்பாளை சுலபமாக திறக்கும் வகையில் தான் அது இருந்துள்ளது.

சிசிடிவி காட்சிகள்

அதுவும், தற்போதைய காலத்தில் சிசிடிவி என்பது தெருமுனைகளில் இருந்து அணைத்து இடங்களிலும் இருக்கிறது. திருடர்கள் என்னதான் புதுசுபுதுசாக திருட ஆரம்பிச்சாலும் இந்த சிசிடிவி விஷியத்தில் மற்றும் மாறவேயில்லை.

இதைத்தொடர்ந்து, அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் அரைகுறை ஆடையுடன் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.