ஆர்யன் கானுக்கு இன்றாவது ஜாமீன் கிடைக்குமா? தொடரும் விசாரணை

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை, மும்பை உயர்நீதிமன்றத்தில் இன்றும் தொடர்கிறது.

ஆர்யன் கானுக்கு இன்றாவது ஜாமீன் கிடைக்குமா? தொடரும் விசாரணை

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை, மும்பை உயர்நீதிமன்றத்தில் இன்றும் தொடர்கிறது.

சொகுசு கப்பலில் போதை விருந்து தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கான், தமக்கு ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதனை மும்பை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. ஆர்யன் கான் சார்பில் வாதாடிய மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி, ஆர்யன் கான் போதை பொருள் பயன்படுத்தவில்லை என்றும், அவரிடம் இருந்து போதை பொருட்கள் கைப்பற்றப்படவில்லை எனவும் கூறியுள்ளார். வாட்ஸ் அப் தகவல் பரிமாற்றத்தின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள முகுல் ரோகத்கி, ஆர்யன் கான் கைதுக்கு சரியான காரணம் கூறப்படவில்லை என தெரிவித்தார்.

ஆர்யன் கானிடம் இருந்து பெரிய அளவிலான போதைப்பொருள் மீட்கப்பட்டதாகக் கூறி, நீதிமன்றத்தை போதைப்பொருள் தடுப்பு பிரிவு தவறாக வழிநடத்துவதாகவும் வாதிட்டார். இதைப்போல அலி காஷிப் கான் தேஷ்முக், அமித் தேசாய் ஆகியோரும் தங்கள் வாதத்தை நிறைவு செய்தனர். இதனையடுத்து இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள விசாரணையில், மூன்று பேரின் ஜாமீன் மனுக்கள் தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பில் கூடுதல் சொலிசிட்டர்  ஜெனரல் அனில் சிங் பதிலளிக்க உள்ளார். அதன்பிறகே ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.