கணவனை கொன்று வீட்டில் உடலை புதைத்த பெண்!!!

தகராறு காரணமாக ஒரு பெண் தனது கணவரைக் கொன்று வீட்டில் புதைத்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
கணவனை கொன்று வீட்டில் உடலை புதைத்த பெண்!!!
Published on
Updated on
1 min read

கணவ்ன மனைவிக்கிடையே பல வகையான் அதகராறுகள் இருக்கும். சிலவற்றில் சண்டைகள் கூட மூடலாம். ஆனால், ஒரு பெண், தகராறு நடந்த காரணத்தால், கணவரையே கொன்று, தங்களது வீட்டில் புதைத்திருக்கிறார். தகவல்களை வெளியிட்ட காவல் துரையினர் இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகக் கூறிகின்றனர்.

உத்திரபிரதேச மாநிலன் ஷாஜகான்பூரில், காடியா ரங்கன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கமாரியா கிராமத்தைச் சேர்ந்த ஷில்பி என்பவர், தனது கணவர் கோவிந்துடன் ஆகஸ்ட் 7ம் தேதி சண்டையிட்டிருக்கிறார். பின், அவரைக் கொன்று, வீட்டில் குழி தோண்டி அங்கேயே புதைத்துள்ளார். ஆனால், தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக அந்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். சந்தேகம் அடைந்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், உண்மை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கிய பிறகுதான் விஷயம் தெரிய வந்தது. அதன்பிறகு, நாசிக்கில் வசிக்கும் இறந்தவரின் தாயாருக்கு உள்ளூர்வாசிகள் தகவல் கொடுத்ததாக மகாராஷ்டிர போலீசார் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையின் போது, ​​தனது கணவர் குடிப்பழக்கம் உள்ளவர் என்றும், ஞாயிற்றுக்கிழமை அவர்களுக்குள் சண்டை நடந்ததாகவும் அந்த பெண் போலீசாரிடம் தெரிவித்தார். மேலும், வீட்டின் மொட்டை மாடியில் தூங்கச் சென்றதாகவும், கணவர் கீழே தூங்கியதாகவும் அந்த பெண் கூறியுள்ளார். இரவில், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும், இதனால் பயந்து போய் வீட்டில் குழி தோண்டி உடலை புதைத்ததாக அந்த பெண் கூறியுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com