தெலுங்கு தேசம் கட்சிக்கு சொந்தமான அலுவலகங்களை சூறையாடிய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்

ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சிக்கு சொந்தமான அலுவலகங்களை, ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் சூறையாடியதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.  

தெலுங்கு தேசம் கட்சிக்கு சொந்தமான அலுவலகங்களை சூறையாடிய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்

அண்மையில், செய்தியாளர்களை சந்தித்த தெலுங்கு தேசம் கட்சியின் செய்தி தொடர்பாளரான பட்டாபிராமன்  முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை பற்றி தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால்  ஆத்திரமடைந்த ஜெகன் மோகன் ரெட்டி கட்சி தொண்டர்கள் நேற்று மங்களகிரியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் அலுவலகத்திற்கு சென்று, பாதுகாப்பு பணியிலிருந்த போலீசாரையும் தள்ளிவிட்டு, மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்கி  சூரையாடியுள்ளனர். அதுமட்டுமல்லாது, அக்கட்சிக்கு சொந்தமான பிற அலுவலகங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இச்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஆந்திராவில் சட்டம் -ஒழுங்கு சீர்கேடு அடைந்துவிட்டதாகவும், இதற்கு பொறுப்பேற்று ஜெகன் மோகன் ரெட்டி பதவி விலக வேண்டும் என கூறியுள்ளார். சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் முறையிட்டுள்ளார்.