பெற்றோர்கள் கண்டித்ததால் இளம் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை..!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே காடை இடையாத்தூர் பகுதியில், இளம் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை...
பெற்றோர்கள் கண்டித்ததால் இளம் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை..!
Published on
Updated on
1 min read

அறந்தாங்கி அருகே காடை இடையாத்தூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரின் மகன் அருண்(23). இவர் கான்கிரீட் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரது மகள் முகேஸ்வரி (15). அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் நிலையில்,  இருவரும் கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இவர்களின் காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரியவரவே,  வியாழன் அன்று கண்டித்துள்ளனர். பின்னர் நேற்று ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறி வெளியே சென்றவர்கள் இரவு வரை வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தபோது, ஒரு பகுதியில் உள்ள புளிய மரத்தில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பின்னர் நாகுடி காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகுடி காவல் துறையினர், சடலத்தை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com