நள்ளிரவில் சிறுமிக்கு பாலியல் தொல்லை... கஞ்சா போதையில் மதிமயங்கிய வாலிபர்... பிளேடால் கையை கிழித்த கொடூரம்...

சென்னையில் கஞ்சா போதையில் 16 வயது சிறுமியை தனது வீட்டிற்கு தூக்கிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததோடு, சிறுமியை மிரட்டி பிளேடால் கையை கிழித்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நள்ளிரவில் சிறுமிக்கு பாலியல் தொல்லை... கஞ்சா போதையில் மதிமயங்கிய வாலிபர்...  பிளேடால் கையை கிழித்த கொடூரம்...
சென்னை ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 16 மற்றும் 21 வயதில் இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தனது 16 வயது மகள் காணாமல் போகவே அனைத்து இடங்களிலும் அப்பெண் தேடியுள்ளார். பின்னர் தனது வீட்டருகே வசிக்கும் நவீன் குமார் என்ற இளைஞனின் வீட்டிற்கு பின்புறம் தனது மகள் காயங்களுடன் விழுந்து கிடப்பதை அறிந்து அங்கு சென்று சிறுமியை மீட்டு நடந்ததை கேட்டுள்ளார்.
 
அப்போது சிறுமி நவீன் குமார் தன்னை அவசரமாக வரக்கூறி போன் செய்து அழைத்ததால் தெரிந்தவர் தானே என்று எண்ணி வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும், அப்போது நவீன் குமார் தன்னை அவரது வீட்டிற்குள் அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி முத்தம் கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அதை வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டி பிளேடால் தனது கையை கிழித்து விட்டதாகவும் தாயிடம் கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் தாய் உடனடியாக நவீன் குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று மாலை அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரில் அளித்தார்.
 
இதனையடுத்து நவீன்குமார் மீது புகாரின் பேரில் அசோக் நகர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை தலைமறைவாக இருந்த நவீன் குமாரை போலீசார் கைது செய்து  விசாரித்தனர். அப்போது தான் தெரியாமல் கஞ்சா போதையில் இவ்வாறு செய்துவிட்டதாக நவீன் குமார் வாக்குமூலம் அளித்தார். அதனைத் தொடர்ந்து நவீன் குமாரை அசோக் நகர் அனைத்து மகளிர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.