போதையில் பூட்டிய கடையை அடித்த உடைத்த இளைஞர்கள்... 

பழனியில் மதுபோதையில் பூட்டியிருந்த கடையை உடைத்து இளைஞர்களை  சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் இளைஞர்களைக் கைது செய்தனர்.

போதையில் பூட்டிய கடையை அடித்த உடைத்த இளைஞர்கள்... 

பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி கிராமத்தில் இரவு நேரத்தில் மது அருந்திய இளைஞர்கள் பாபு, இளங்கோ, பெரியசாமி ஆகிய மூவரும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் சாலையோரத்தில் பூட்டியிருந்த கடையின் முன்பக்க கதவை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

காலையில் கடைக்கு வந்த கடை உரிமையாளர் கடையின் முன்பக்கம் உடைக்கப்பட்டு இருப்பது பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது இளைஞர்கள் மது போதையில் கடையை உடைத்து தெரியவந்துள்ளது.

உடனடியாக பழனி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து போலீசார் மது போதையில் கடையை உடைத்த மூன்று இளைஞர்களையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.