வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை..!

வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை..!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில், வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது.

நீட் தேர்வில் தேர்வாகாத நிலையில், பொறியியல் படித்த தினேஷ்பாபு என்ற இளைஞருக்கு, படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை என தெரிகிறது. தனியார் நிறுவனங்களில் சொற்ப சம்பளத்தில் பணிபுரிந்து வந்த அவருக்கு, கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே விரக்தியில் இருந்து வந்த அவர், இலுப்பூர் சாலையில் உள்ள விவசாயக் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.