செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்.. மற்ற மூன்று பேர் தப்பி ஓட்டம் - பிடிபட்ட இளைஞர் காவல்துறையிடம் ஒப்படைப்பு

பல்லடம் அருகே செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்.. மற்ற மூன்று பேர் தப்பி ஓட்டம் - பிடிபட்ட இளைஞர் காவல்துறையிடம் ஒப்படைப்பு
Published on
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர், அவ்வழியாக வந்த பனியன் கம்பெனி தொழிலாளியின் கவனத்தை திசைதிருப்பி  அவரது செல்போனை பறித்துக்கொண்டு தப்ப முயன்றனர்.

அப்போது தொழிலாளி, அவர்களில் ஒருவரை பிடித்து கீழே தள்ளினார், மற்ற 3 பேர் தப்பி சென்றனர். தொடர்ந்து இளைஞரிடம் இருந்து செல்போனை மீட்ட தொழிலாளி பொதுமக்கள் உதவியுடன் திருடனை கட்டிபோட்டார். அப்போது அந்த இளைஞர் பொதுமக்களை பார்த்து ஆபாசமான வார்த்தையில் கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இளைஞரை காவல் நிலையம் அழைத்து சென்றனர். தொடர்ந்து இப்பகுதியில் செல்போன், நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வித்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com