வாரி சுருட்டிய மருமகன்... புகார் கொடுத்த மாமியார்...

மாமியாரின் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை சுருட்டி கொண்டு தலைமறைவான மருமகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்.
வாரி சுருட்டிய மருமகன்... புகார் கொடுத்த மாமியார்...
சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி/60, இவரது மகள் லட்சுமி,  இவருக்கு யுகேந்திரன் என்பவரோடு திருமணம் செய்து வைத்து மகள்,  மருமகன், பேத்தி என வாடகை வீட்டில் ஒன்றாக கடந்த 4 வருடமாக வசித்து வருகின்றனர்.
கடந்த 26 ஆம் தேதி மருமகன் யுகேந்திரன் வீட்டில் இருந்து சென்ற நிலையில் மீண்டும் வீட்டிற்கு திரும்பாத நிலையில் செல்போனும் அனைத்து வைக்கப்பட்டு இருந்ததால் சந்தேகமடைந்து வீட்டின் பீரோவை திறந்து பார்த்த பொழுது அதில் வைத்து இருந்த 15 சவரன் நகை மற்றும் 3 இலட்சம் பணம் காணவில்லை எனவும்,  மேலும் சரஸ்வதி அவரது ராமுவின் பூர்வீக சொத்தை விற்று வங்கி கணக்கில் போட்டு வைத்து இருந்த 26 இலட்ச ரூபாய் பணத்தையும் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் சிறுக சிறுக மொத்த பணத்தையும் எடுத்துள்ளதும் தெரியவந்ததை அடுத்து தனது மருமகன் யுகேந்திரன் எடுத்து சென்ற 15 சவரன் நகை மற்றும் 29 இலட்ச ரூபாய் பணத்தை மீட்டு தரக்கோரி அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com