காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். முருகனின் சடலத்தை கைப்பற்றிய அதிகாரிகள், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வனஜாவிடம் விசாரணை நடத்தினர். அதில் முன்னுக்கு பின் முரணாக வனஜா பதிலளிக்க, கிருஷ்ணகுமாரின் உறவையும் கண்டுபிடித்தனர் காவல்துறையினர். இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கிருஷ்ணகுமாரும், வனஜாவும் தனிமையில் உல்லாசமாக இருந்ததை முருகன் கண்கூடாக கண்டதுடன், இருவரையும் சரமாரியாக திட்டியதோடு, ஊரை கூட்டி உண்மையை சொல்லப் போவதாக தெரிவித்துள்ளார். இதனால் அச்சமடைந்த வனஜாவும், கிருஷ்ணகுமாரும் சேர்ந்து கழுத்தை நெறித்து கொலை செய்ததாகவும், உறவினர்களிடம் இருந்து தப்பிக்க அவர் போதையில் விஷம் அருந்தி இறந்ததாக நாடகமாடியதாகவும் ஒப்புக் கொண்டனர்.