பலே நபரின் பலே பிளான்.. அலேக்காக தூக்கிய போலீஸ்..!

பலே நபரின் பலே பிளான்.. அலேக்காக தூக்கிய போலீஸ்..!
Published on
Updated on
1 min read

சென்னையில் நான்கு கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி பிரபல உணவக உரிமையாளரிடம் மோசடி செய்த நபரை காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

பலே நபரின் பலே பிளான்

சென்னை அடையாறு காவல் நிலையத்தில் பிரபல உணவகத்தின் உரிமையாளர், நாளிதழில் வட்டியில்லா கடன் வழங்குவதாக வந்த விளம்பரத்தைப் பார்த்து சுரேஷ் என்பவரை அனுகியதாகவும் அப்போது அக்ரிமெண்ட் செலவுகளுக்கு என்று கூறி ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு தலைமறைவாகிவிட்டதாகவும் குறிப்பிட்டு பணத்தை மீட்டுத் தருமாறு  புகார் அளித்தார்.

அலேக்காக தூக்கிய போலீஸ்

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து கோவை அன்னூர் பகுதியில் பதுங்கியிருந்த சுரேஷ் குமார் என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com