மணல் கொள்ளையர்களிடம் தொடர்ந்து டீலிங்கில் இருந்து வரும் ஆம்பூர் காவல்துறை!

மணல் கொள்ளையர்களிடம் தொடர்ந்து டீலிங்கில் இருந்து வரும் ஆம்பூர் காவல்துறை!

ஆம்பூரில் மணல் கொள்ளையர்களிடம் பீட் பணம் கொடுக்கவில்லை என்றால் இன்ஸ்பெக்டர் எல்லா வண்டிகளையும் நிறுத்தி விடுவார் என கரராக பேசும் தலைமை காவலரின் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர மற்றும் கிராமிய , உமராபாத் உள்ளிட்ட  காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட   பகுதிகளில் இரவு நேரங்களில் மணல் கொள்ளையர்கள் பாலாற்றில் மணல் கடத்தி செல்வது வாடிக்கையாகிவிட்டது.

இந்நிலையில், ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் ஆம்பூர் அடுத்த கட்டவாரபல்லி  பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் மணல் கொள்ளையர்களிடம் மாமூல் பணம் குறைவாக கொடுத்தது தொடர்பாக பேசும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், காவலர் சம்பத்தப்பட்ட நபரிடம், எதற்காக இன்று பீட் பணம் (மாமூல்) கொடுக்கவில்லை என்று கேட்க, அதற்கு அந்த நபரோ, இன்று ஒரு நாள் தான் கொடுக்கவில்லை, என பதில் கூறுகிறார். அதற்கு காவலர், இப்பொழுதெல்லாம், கம்மியாக தான் பீட் பணம் வருவதாக இன்ஸ்பெக்டர் கூறுகிறார். நீங்கள் எல்லாம் பணம் தருவதில் சிக்கல் ஏற்பட்டால், இன்ஸ்பெக்டர் கூறினால், நான் வண்டியை புடிச்சு தான் ஆகணும். அவர் சொல்றதை கேட்பதை தவிர வேறு வாலில் இல்லை, என கண்டிப்புடன் கூறுகிறார்.

அதற்கு அந்நபர், கொஞ்சம் மின்ன பின்ன ஆனாலும் பணத்தை கொடுத்துவிடுகிறேன், எதாவது பாத்து செஞ்சு விடுங்க என்பது போல் பேசுகிறார். 

மணல் கடத்தலை தடுத்து, நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துறை, மணல் கொள்ளையர்களிடம் தினமும் லஞ்சப்பணம் வாங்கிவிட்டு, அவர்களுக்கு பாதுகாப்பும் அளித்து வருகின்றனர். பணம் கொடுக்கவில்லை என்றால், நேரில் கூப்பிட்டு, கண்டித்து பேசி பணம் வசூல் செய்து வருகின்றனர்.

தலைமை காவலர் சீனிவாசன் கர்ரராக பேசும் ஆடியோ வைரலாகி காவல்துறையினர்  மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வரும் நிலையில், இதுபோன்று மணல் கடத்தலுக்கு உடந்தையாக செயல்படும் தலைமை காவலர் மீது துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிக்க: வீட்டு மனை பட்டாவை முறையான தரவுகளுடன் வழங்குக..திருநங்கைள் மனு!