வீட்டில் Wi-Fiஐ இணைப்பை துண்டித்ததால் ஆத்திரமடைந்த சிறுவன் தனது பெற்றோரையும், சகோதரனையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் ஸ்பெயினில் அரங்கேறியுள்ளாது.
ஸ்பெயினில், எல்சே நகரில் வசித்து வரும் 15 வயது சிறுவன் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் பெற்றோர்கள் அவனை கண்டித்ததோடு மட்டும் நிறுத்திவிடாமல், வீட்டில் இருந்த வைஃபை இணைப்பையும் துண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன் கடந்த 8 ஆம் தேதி வீட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து தனது பெற்றோரையும், சகோதரனையும் சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.
இந்நிகழ்விற்கு பிறகு அந்த சிறுவன் வீட்டிலிருந்து எந்தவித தகவலும் வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், வீட்டிலிருந்த சிறுவனிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது சிறுவன் நான் தான் கொலை செய்தேன் என்று ஒப்புக்கொண்டது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இது குறித்து பேசிய போலீசார், பெற்றோரை கொலை செய்த சிறுவன், 3 நாட்களாக சடலங்களுடன் தனியாக வசித்து வந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.