மூன்றே ஆண்டில் கோடீஸ்வரரான காவல் ஆய்வாளர்: வழக்குபதிந்த லஞ்ச ஒழிப்பு துறை  

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி காவல் நிலைய ஆய்வாளர் தங்கராஜ் மீது கோவை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மூன்றே ஆண்டில் கோடீஸ்வரரான காவல் ஆய்வாளர்: வழக்குபதிந்த லஞ்ச ஒழிப்பு துறை   
Published on
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி காவல் நிலைய ஆய்வாளர் தங்கராஜ் மீது கோவை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி காவல் நிலைய ஆய்வாளர் தங்கராஜ் என்பவர் 2016 முதல் 2019 வரை பல்லடம் மற்றும் சூலூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. குறிப்பாக 3 ஆண்டு காலத்தில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தனது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் சொத்து சேர்த்து இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் கன்னிவாடி காவல் நிலைய ஆய்வாளர் மீது கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் 3 பிரிவுகளில்  வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் சக அபோலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com