வழக்கறிஞர் கொலையில் புதிய திருப்பம்!!! சிசிடிவி காட்சி வெளியீடு!!!

அரியலூர் -  உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சாமிநாதன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து தா.பழூர் போலீசார் தேடி வருகின்றனர்.
வழக்கறிஞர் கொலையில் புதிய திருப்பம்!!! சிசிடிவி காட்சி வெளியீடு!!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அனைத்துடன் கிராமத்தில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அவரை வெட்டி கொலை செய்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் அணைக்குடம் கிராமத்தில் நேற்று உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உள்ள சாமிநாதனை ஆறு பேர் கொண்ட கொலை கும்பல் வெட்டி படுகொலை செய்தது.

இச்சம்பவம் குறித்து சாமிநாதனின் தந்தை சுழட்டி () சுப்பிரமணியன் தா.பழூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில்  போலீசார் நாச்சியார் கோவில் கிராமத்தை சேர்ந்த இளையராஜா உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து 8 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com