நெல்லையில் பிரபல ரவுடி ‘ராக்கெட் ராஜா’ கைது எதிரொலி......

நெல்லையில் பிரபல ரவுடி ராக்கெட் ராஜா கைதான நிலையில் திசையன்விளை அருகே நவ்வலடியில் மினி பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியுள்ளது.
நெல்லையில் பிரபல ரவுடி ‘ராக்கெட் ராஜா’ கைது எதிரொலி......

திருநெல்வேலி: திசையன்விளை அருகே நவ்வலடியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே சாலை ஓரம் மினி பேருந்து ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு இரு சக்கர வாகனத்தில் வந்த சென்ற மர்ம கும்பல் ஒன்று அந்த மினி பேருந்தினுள் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர்.

இதை கவனித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஓடிச் சென்று தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இல்லாததால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை இருப்பினும் பேருந்தின் இருக்கைகள் மற்றும் சில பாகங்கள் தீயில் கருகி சேதமாகின இது குறித்து உவரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கொலை வழக்கில் நேற்று கைதான பிரபல ரவுடி ராக்கெட் ராஜாவின் சொந்த ஊரான ஆணைகுடி அருகில் தான் நவ்வலடி ஊர் அமைந்திருப்பதால் ராக்கெட் ராஜாவின் கைது சம்பவத்தின் எதிரொலியாக இந்த பேருந்து தீவைப்புச் சம்பவம் நடைபெற்றதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தொழில் முன்விரோதம் காரணமாகவும் இச்சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். பிரபல ரவுடி கைது செய்யப்பட்ட சில மணி நேரத்தில் நெல்லையில் மினி பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com