சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, கல்லடி வாங்கிய வந்தே பாரத் ரயில்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, கல்லடி வாங்கிய வந்தே பாரத் ரயில்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மைசூர் செல்லும் வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கற்களை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து, மைசூர் செல்வதற்காக இன்று அதிகாலை பேசின் பிரிட்ஜ் கேரஜில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ரயிலை எடுத்து வந்து நடைமேடையில் நிறுத்தியுள்ளனர்.

அப்போது ரயிலில் ஏறிய  பயணிகள் ரயிலின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, கற்கள் உள்ளே சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் என்ன செய்வது அறியாத திகைத்த பயணிகள் உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு  தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இந்த சம்பவம் குறித்து அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அதிகாலை நேரத்தில் வந்தே பாரத் ரயில் மீது  கல்வீசப்பட்டு கண்ணாடிகள் உடைந்து உள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கடந்த புதன்கிழமை அன்று உத்தர பிரதேசத்தில் ஆடுகள் மீது வந்தே பாரத் ரயில் மோதியதால் கற்கள் வீசி கண்ணாடிகள் உடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க || "ஜெயலலிதாவின் பொருட்கள், அவரது நாமினியிடம் ஒப்படைக்கப்பட்டது" லஞ்ச ஒழிப்புத்துறை பதில்!