அதிக விலை வாங்கியதால் அரசு மதுபானக்கடை மீது தாக்குதல்...!!

அதிக விலை வாங்கியதால் அரசு மதுபானக்கடை மீது தாக்குதல்...!!

காரைக்குடி அருகே பள்ளத்தூர் அரசு டாஸ்மாக் கடையில் இரண்டாவது முறையாக பெட்ரோல் குண்டு வீச்சு நடந்துள்ளது. 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூர் கடை வீதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுவிற்பனை கடையில் நேற்று இரவு  கடையை அடைத்துவிட்டு  இரவு கணக்குகளை சரி பார்த்து கொண்டிருந்த போது கடை முன் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்  தான் கையில் மறைத்து  வைத்திருந்த பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலில் தீயை பற்ற வைத்து கடைக்குள் வீசி தப்பி தலைமறைவானார்.  இதில் மூன்று அட்டைப்பெட்டியில் இருந்த மது பாட்டில்கள் தீப்பிடித்து எரிந்து சேதமானது.  மேலும் பல ஆயிரம் மதிப்புள்ள  விற்பனை பணமும் எரிந்து சேதமானது.

இதில் காளையார் கோவில் பகுதியை சேர்ந்த விற்பனையாளர் அர்ஜுனன் உடலில் தீக்காயம் ஏற்பட்டு படுகாயங்களுடன் மேல்சிகிச்சைக்கு மதுரை அரசு  மருத்துவமனை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  கடந்த மாதம் பிப்ரவரி 10 ம் தேதி இரவு இதே போல மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பிய நிலையில் பணம் , மதுபாட்டில்கள் சேதமானது.  இந்த சம்பவம் குறித்து பள்ளத்தூர் போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளியை பிடிக்க முடியாத நிலையில் மீண்டும் அதே அரசு மதுபான விற்பனை கடையில் மீண்டும் இரண்டாவது முறையாக பெட்ரோல் குண்டு வீச்சு நடந்துள்ளது. 

விசாரனை செய்ததில் இந்த பகுதியில் கூலி தொழிலாளர்கள் மற்றும் அரசி ஆலைகளில் வட மாநில தொழிலாளர்கள் அதிகம் உள்ள பகுதி எனவும் இந்த டாஸ்மாக் கடையில்  குவாட்டர் பாட்டிலுக்கு அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ 10 முதல் ரூ 20 வரை அதிகம் கொடுத்தால் தான்  விற்பனையாளர் மது பாட்டில்கள் கொடுப்பதாக கூறப்படுகிறது.  இதன் காரணமாக அடிக்கடி மதுப்பிரியர்கள் சண்டை போட்டபோதும் அதிகம் பணம் வசூலிப்பதில் விற்பனையாளர் கரார் காட்டியாத கூறப்படுகிறது. 

அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு மதுபாட்டிலை விற்பனை செய்வதால் ஆத்திரமடைந்த வாலிபர்  மதுபோதையில்  இவ்வாறு செய்திருக்கலாம் என காவல்துறையினரின்  முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com