அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் குடும்பத்தினர் மீது தாக்குதல்...!

சென்னையில் திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் குடும்பத்தினரை மர்ம நபர்கள் ஆறு பேர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தியாகராய நகர் ஏஜிஎஸ் திரையரங்கில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆரின் மகன் ரமேஷ் மற்றும் பேரன் குடும்பத்துடன் படம் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது 3 பெண்கள் உட்பட மர்ம நபர்கள் ஆறு பேர் திரையரங்கில் அதிக சத்தம் எழுப்பி கொண்டிருந்தனர். அதனை அமைச்சரின் மகன் ரமேஷ் மற்றும் பேரன் தட்டி கேட்டுள்ளனர். இதனால், இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து படம் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சரின் மகன் மற்றும் பேரனை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த இருவரும் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக  மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். குடும்பத்தினர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com