பிறந்து சில தினங்களே ஆன பெண் சிசு...! துணியில் சுற்றி வீசி சென்ற சம்பவம்...!

பிறந்து சில தினங்களே ஆன பெண் சிசு...! துணியில் சுற்றி வீசி சென்ற சம்பவம்...!
Published on
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ளது அங்கராயநல்லூர் பெரிய ஏரி. இந்த ஏரி ஜெயங்கொண்டம்- கும்பகோணம் செல்லும் சாலையில் உள்ளது. இதில் உள்ள பெரிய ஏரியில், பிறந்த சில தினங்களே ஆன பெண் சிசு துணியில் சுற்றிய நிலையில் வீசப்பட்டுள்ளது.

இந்நிலையில் காலையில் அந்த வழியே சென்றவர்கள் பார்த்துவிட்டு தகவல் கூறியதன் பேரில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல் துறையினர் சென்று பார்த்த போது பிறந்த சில தினங்களே ஆன பெண் சிசு துணியில் சுற்றிய நிலையில் சடலமாக கிடந்துள்ளது. 

அதனை மீட்டு பரிசோதனை செய்த போது கண், காது, நெற்றி உள்ளிட்டவைகளை மீன்கள் கொத்திய நிலையில் அழுகி இருந்த பெண் சிசுவை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பிரேத பரிசோதனை செய்தனர்.

இச்சம்பவம் குறித்து தா.பழூர் காவல்துறையினர் இந்த குழந்தை யாருடையது, எப்படி இந்த இடத்திற்கு வந்தது என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com