குடிப்பதற்கு பணம் தர மறுத்த மனைவியின் காதை அறுத்து கம்மலை பறித்து சென்ற கணவன்...

வேடசந்தூரில் மதுபானம் குடிப்பதற்கு பணம் தர மறுத்த மனைவியின் காதை அறுத்து, கம்மலை கணவர் எடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
குடிப்பதற்கு பணம் தர மறுத்த மனைவியின் காதை அறுத்து கம்மலை பறித்து சென்ற கணவன்...

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி, குடிபோதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமது மனைவி தங்கமணியை தினமும் மிரட்டி பணம் வாங்கி குடித்து வந்துள்ளார். அதன்படி இன்று காலை மதுகுடிக்க பணம் வேண்டும் என மனைவியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவருடைய மனைவி மறுக்க, ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணி, தமது மனைவி என்றும் பாராமல் அவரது காதை அறுத்து கம்மலை எடுத்து சென்றுள்ளார்.

வலியால் துடித்த தங்கமணி, காது அறுபட்ட நிலையில் வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றுள்ளார். அதனை கண்ட போலீசார், முதலில் மருத்துமனைக்கு செல்லுங்கள் என்றும், தாங்கள் மருத்துவமனைக்கு வருவதாகவும் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தங்கமணி சிகிச்சை பெற்று வருகிறார். மது குடிக்க பணம் கொடுக்காததால், மனைவி காதை அறுத்த பாலசுப்ரமணி போன்ற கணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவமனையில் இருந்த பெண்கள் தெரிவித்துள்ளனர். 

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com