என்னடா பொசுக்குன்னு கொளுத்திப்புட்ட? இவரல்லவா உயிர் நண்பன்?

அரியலூர் மாவட்டத்தில் ஓட்டிப் பார்ப்பதற்கு தராததால் நண்பனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார் ஒரு இளைஞர்.
என்னடா பொசுக்குன்னு கொளுத்திப்புட்ட? இவரல்லவா உயிர் நண்பன்?
Published on
Updated on
1 min read

அரியலூர் | ஜெயங்கொண்டம் அடிப்பள்ளத்தெருவைச் சேர்ந்தவர் உவைஸ் அகமது. 19 வயதான இவர் படித்து முடித்து வேலை தேடி வந்த நிலையில் இவர் கே.டி.எம். 390 எனும் விலைஉயர்ந்த பைக் ஒன்றை வாங்கினார்.

சுமார் 3 லட்சம் ரூபாய் விலை மதிப்புள்ள இந்த பைக்கை வாங்கிய உவைஸ் அகமது ஊரில் பந்தாவாக ஓட்டிக் சென்றுள்ளார். இதனை வியாழக்கிழமையன்று எதேச்சையாக பக்ருதீன், அந்த கே.டி.எம். பைக்கை ஓட்டிப் பார்ப்பதற்கு ஆசை கொண்டார்.

ஆனால் பக்ருதீன் ஏற்கெனவே பைக் திருட்டு, ஆடு திருட்டு, குடிபோதையில் தகராறு செய்ததன் காரணமாக பல்வேறு வழக்குகள் அவர் மீது நிலுவையில் இருந்ததால் பைக்கை அளிப்பதற்கு மறுத்து விட்டார் அகமது. 

இதனால் ஆத்திரமடைந்த பக்ருதீன், அன்றைய நாள் இரவில் மற்றொரு நண்பனுடன் மதுஅருந்திக் கொண்டிருந்தார். போதை தலைக்கேறியவுடன், அங்கே காத்திருந்து, நள்ளிரவு சுமார் 1 மணியளவில் உவைஸ் அகமதுவின் வீடு பக்கம் சென்றார். 

தெருவில் அனைவரும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் அமைதியாக சென்ற பக்ருதீன், பெட்ரோலை பைக் மீது ஊற்றி தீயை வைத்தார். மேலும் அதன் அருகே நின்றிருந்த உவைஸ் அகமதுவின் நண்பருக்கு சொந்தமான பல்சர் பைக்கையும் எரித்து விட்டு தப்பியோடினார். 

சுமார் 3 லட்சம் மதிப்புள்ள கே.டி.எம். பைக் பற்றி எரிந்ததைத் தொடர்ந்து உள்ளே இருந்து உரிமையாளர் உவைஸ் அகமது மற்றும் குடும்பத்தார் அலறியடித்துக் கொண்டு ஓடி வந்தனர். 

இதையடுத்து தண்ணீரை அடித்து தீயை அணைத்தவர்கள் இதுகுறித்து ஜெயம்கொண்டம் காவல்துறையினருக்கு தகல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சி.சி.டி.வி ஆதாரத்தைக் கொண்டு, பக்ருதீனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

நண்பனின் பைக்கை ஓட்டிப் பார்க்க வேண்டும் என அனைவருமே நினைப்பதுண்டு. ஆனால் பைக்கை தர மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம், பைக் எரிச்சலைக் காட்டிலும் வயிற்றெரிச்சலே அதிகமுள்ளது என்பதுதான் வெளிப்படையாக புலனாகிறது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com