கள்ளக்குறிச்சி | சங்கராபுரம் வள்ளலார் கோவில் செல்லும் சாலை அருகே வசித்து வருபவர் வெங்கடேஷ்வரன் மனைவி அனிஷா. இவரது கணவர் வெங்கடேஸ்வரன் துபாயில் வேலை செய்து வருகிறார். அனிஷா கள்ளக்குறிச்சியில் அழகு கலை நிபுணராக பணிசெய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி அனிஷாவின் குழந்தைக்கு சென்னை எக்மோரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை முடிந்த பின் பிறகு இன்று 1.01.2023 காலை 8 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார். வீட்டுக்கு சென்று பார்த்த போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையிலே இருந்துள்ளது.
மேலும் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் அங்கும் இங்குமாய் சிதறி கிடந்தன. படுக்கை அறைக்கு சென்று பீரோவை பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 20 சவரன் தங்க நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அனிஷா பிறகு சங்கராபுரம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார் தகவலின் பேரில் சம்பவம் இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் தடங்களை சேகரித்து சங்கராபுரம் காவல்துறையினர் கொள்ளையர்களை தொடர்ந்து தேடி வருகின்றனர்.
தொடர்ந்து சங்கராபுரம் பகுதியில் கொள்ளை கும்பல் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி வருவதால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் இந்த கொல்லையில் முக்கிய சம்பவம் என்னவென்றால் கொள்ளையர்கள் தங்க நகை வெள்ளிப் பொருட்களை பணம் கொள்ளையடித்த பிறகு கொள்ளையர்கள் தங்கள் கைரேகை தடயங்களை அழிக்க கொள்ளையடிக்கப்பட்ட வீட்டின் கதவுகளை கழிவி சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | சென்னையின் புதிய அடையாளம் ட்ரோன் காவல்நிலையம்...