விசாரணைக்கு வந்தால், தாக்கும் காவல் உதவி ஆய்வாளர்!

விசாரணைக்கு வந்தால், தாக்கும் காவல் உதவி ஆய்வாளர்!

தூத்துக்குடி: தூத்துக்குடியில், விசாரணைக்கு வந்த நபரை தாக்கியுள்ளார் காவல் உதவி ஆய்வாளர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எம் சண்முகபுரம் கிராமத்தைச் சேர்ந்த   ஜெகநாதன். அவருக்கும்  சூரங்குடி கிராமத்தைச் சேர்ந்த  அழகு முருகேசன் என்பவருக்கும் நிலப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக முன்பே, புகார் மனு அளிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து,  சூரங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரம்  தலைமையில் நேற்று வியாழக்கிழமை  சூரங்குடி காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்றுள்ளது. 

அப்பொழுது, விசாரணைக்காக அழகு முருகன் உடன் அவரது சகோதரர் ராஜகனி என்பவரும்  உடன் வந்துள்ளார். விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது காவல் உதவி ஆய்வாளர் சுந்தரத்திற்கும், ராஜகனிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆய்வாளர் சுந்தரம், ராஜகனியை தள்ளிவிட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில், காயமடைந்த ராஜகனி தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இதுபோல, கடந்த 2018ல், உயர் நீதி மன்ற வக்கீல் பெரியசாமி என்பவர், தட்டார்மடம் காவல் நிலையத்தில், ஒரு புகார் தெரிவிக்க சென்றுள்ளார். அப்பொழுது, அங்கு பணியில் இருந்த ஆய்வாளர் சுந்தரம், அவரை கடுமையாக தாக்கியும், தான் ரத்தக் கறையுடன் இருப்பதய் பதிவு செய்வதற்காக தனது தொலைபேசியில், செல்பி எடுத்துள்ளார். அப்பொழுது, ஆய்வாளர் சுந்தரம், உன்னால் என்ன செய்ய முடியும் என்றவாறு, புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

தொடர்ந்து, இதுபோல விசாரணைக்கு வருபவர்களை தாக்கும் ஆய்வாளருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பது கேள்விக் குறியாகியுள்ளது.