ஓட ஓட துறத்தி வெட்டிக் கொன்ற கொடூர சம்பவம்...

முன்விரோதம் காரணமாக இளைஞரை ஓடஓட விரட்டி கொலை செய்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
ஓட ஓட துறத்தி வெட்டிக் கொன்ற கொடூர சம்பவம்...
Published on
Updated on
1 min read

புதுச்சேரி | அரியாங்குப்பம் ஆர்.கே நகர் மாஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் பிரவீன்(20) மரம் வெட்டும் தொழில் செய்து வந்த இவரை நேற்றைய முன் தினம் இரவு அரியாங்குப்பம் பெரியார் சிலை அருகே மர்ம கும்பல் ஒன்று ஒடஒட விரட்டி கொலை செய்து விட்டு தப்பி ஒடியது.

இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரியாங்குப்பம் போலீசார் பிரவினின் உடலை கைப்பற்றி பிரேத் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, கொலை வழக்கு பதிவு செய்தனர்.

பின், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்ததில் பிரவினை நான்கு பேர் துரத்தி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்ததை அடுத்து அக்காட்சிகளை போலீசார் வெளியிட்டனர்.

மேலும், இந்த கொலை வழக்கு சம்பந்தமாக ஆகாஷ், மனோ, கவி, ஜான், ஷேக், சீனிவாசன், கார்த்தி உள்ளிட்ட 7 பேரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற் கட்ட விசாரணையில்  ஆகாஷை பிரவின் அவபோது அடித்ததால் தான் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பிரவினை ஆகாஷ் கொலை செய்துள்ளதாக  தெரியவந்துள்ளது.

மேலும் பிரவின் மீது ஜிம் பாண்டியனை கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளதால் அதற்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடைபெற்றதா என்பது குறித்தும் கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர் விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com