பட்டப்பகலில் நடந்து சென்ற பெண்ணை வெட்டிக் கொலை செய்த கொடூரம்...

பட்டப் பகலில் கிராமத்தின் முக்கிய சாலையில் நடந்து சென்ற பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பட்டப்பகலில் நடந்து சென்ற பெண்ணை வெட்டிக் கொலை செய்த கொடூரம்...

அரியலூர் | வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராசாத்தி. இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரை சேர்ந்த முனியப்பன் என்பவரை திருமணம் செய்திருந்தார். அதனை தொடர்ந்து மூன்று ஆண்டுகளில் முனியப்பன் இறந்துவிட்ட காரணத்தினால் நாகை மாவட்டத்தை சேர்ந்த ஏற்கனவே திருமணம் ஆன ராமகிருஷ்ணன் என்பவரை இரண்டாது திருமணம் செய்து கொண்டார்.

மேலும் படிக்க | சென்னையின் புதிய அடையாளம் ட்ரோன் காவல்நிலையம்...

ராமகிருஷ்ணனுக்கு முதல் தாரத்தில் ஒரு மகன் , ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் ராமகிருஷ்ணன் ராசாத்திக்கு  குழந்தைகள் இல்லை. இதனையடுத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராமகிருஷ்ணன் இறந்ததை அடுத்து ராசாத்தி தனது சொந்த ஊரான வெங்கனூர் கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று கோவில் எசனை கிராமத்திற்கு செல்லும் சாலை பகுதியில் உள்ள வயலில் களை வெட்டும் வேலை செய்துவிட்டு மாலை நேரத்தில் வீடு திரும்பி கொண்டிருந்த ராசாத்தியை வழிமறித்து அரிவாளால் வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து தகவல் அறிந்த வெங்கனூர் போலீசார் சம்பவத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் படிக்க | ஆளுநர் மாளிகை முற்றுகை...! இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!

இந்த விசாரணையின் போது ராசாத்தி இரண்டாம் திருமணம் செய்து கொண்ட ராமகிருஷ்ணன் இறந்ததை அடுத்து அவர்களுக்கு ஜீவனாம்சம் கேட்டு அவர்கள் மகனிடம்  வழக்கு தொடர்வதற்க்காக, அதே கிராமத்தை சேர்ந்த நாகராஜன் என்பவரிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்ததாகவும் அதனை அவர் திருப்பி கேட்ட பொழுது நான் உன்னிடம் பணமே வாங்கவில்லை எனவும் ராசாத்தி கூறியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் நாகராஜை தேடி வருகின்றனர். மேலும் வேறு ஏதாவது காரணமா என்றும் கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு போலீசார் ஆய்வு செய்தனர்.

அது சிறிது தூரம் சாலையில் ஓடி நின்றது பட்டப் பகலில் கிராமத்தின் முக்கிய சாலையில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி பெண்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | காங்கிரஸ் கட்சியின் 138 ஆவது நிறுவன நாள்..! கக்கனுக்கு சிலை..!