பஸ் டிரைவரை அரிவாள் வைத்து மிரட்டியதால் பரபரப்பு...

பஸ் டிரைவரை அரிவாள் வைத்து மிரட்டியதால் பரபரப்பு...

ராமநாதபுரம் | ராமநாதபுரத்தில் இருந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு 50க்கும் மேற்பட்ட  நகர பேருந்துகள் இயக்கப்படுகிறது. ராமநாதபுரம் அரண்மனை பஸ்டாப்லிருந்து பொட்டவயல் கிராமத்திற்கு மாலை ஆறு முப்பது மணிக்கு தடம் எண் 26ம் அரசு பேருந்து இயக்கப்பட்டது. பேருந்தை அரசு பேரூந்து டிரைவர் மலைச்சாமி ஓட்டி வந்தார்.

அரண்மனை பஸ் நிறுத்தத்தில் ஆண்கள் பெண்கள் என பயணிகள் 30க்கும் மேற்பட்டோர் ஏறினர். மூதாட்டி ஒருவர்  ஏறுவதற்கு முன் பேருந்து இயக்கியதாக கூறப்படுகிறது. உடனடியாக நடத்துனர் வண்டியை  நிறுத்த சொல்லி  மூதாட்டியை ஏற்றி  பின் சென்றுள்ளது. இந்நிலையில் யானைக் வீதியில்  பேருந்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில் வண்டியில் இருந்த போதை ஆசாமி  ஒருவர் "என்னடா வண்டி ஓட்டுற" என திட்டியபடியே அருவாளுடன் டிரைவரை தாக்கியுள்ளார்.

சற்று எதிர்பாராத ஓட்டுநர் நிலைகுலைந்து நின்றுள்ளார். சபரி மலை செல்வதற்காக கழுத்தில் அணிந்திருந்த துளசி மாலை அறுந்து விழுந்தது. இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் போதை ஆசாமி யிடமிருந்து டிரைவரை மீட்டனர். பஸ் பின் இருக்கையில் அமர்ந்த போதை ஆசாமி மீண்டும் அருவாளை எடுத்து டிரைவரை தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்.

பிரச்சனை பெரிதாகிவிட்ட நிலையில் பயணிகளுடன் பஸ் அருகிலுள்ள பஜார் காவல் நிலையத்தில் நிறுத்தி டிரைவர் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்தார். தகவலறிந்த அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள். காவல் நிலையத்திற்கு வந்து சம்பவம் குறித்து கேட்டனர்.

டிரைவர் மலைசாமி அளித்த புகாரின் பேரில் பொட்டவயல் பகுதியை சேர்ந்த கோவிந்தன் மீது. அரசு பஸ் டிரைவரை பணிசெய்ய விடாமல் தடுத்தது, தாக்கியது போன்ற குற்றங்களுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு கோவிந்தனை கைது செய்தனர். அரசு பேரூந்தில் டிரைவரை  தாக்கியது சக ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தயுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com